தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குங்கள் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உடனே உயர்த்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் உன்னதமான பணியை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை வழங்க வழிவகை செய்த இயக்கம் அ.தி.மு.க.
ஆனால், இன்று அதை உரிய நேரத்தில் பெற அரசு ஊழியர்கள் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 1.1.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு 31.3.2022 அன்றே அறிவித்துவிட்டது.
தமிழக அரசு அறிவிப்பு வெளியிடவில்லை
இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு 24 நாட்கள் கடந்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்து, அகவிலைப்படிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து எந்த அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை.
இந்த விஷயத்தில் அரசு மவுனமாக இருப்பதை பார்க்கும்போது, சென்ற முறை 6 மாதம் காலந்தாழ்த்தியதைப் போல் இந்த முறையும் அரசு தாமதப்படுத்துமோ என்ற சந்தேகம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு
கொரோனா தொற்று ஓரளவு குறைந்து, அரசின் வருமானமும் அதிகரித்துள்ள நிலையில், 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை ஒப்புவித்து பணமாக்கும் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ளது போல், அகவிலைப்படியையாவது உயர்த்தி நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 1.1.2022 முதல் 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக, அதாவது 3 சதவீதம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.