தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா- புதிதாக உயிரிழப்பு இல்லை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கணிசமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, சில நாட்களாக மீண்டும் எகிறத்தொடங்கியது. தலைநகர் சென்னையில் பாதிப்பு தடாலடியாக அதிகரித்ததால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 50 ஐ தாண்டியது.
தொற்று பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியதால், மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவித்த தமிழக அரசு, அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், நேற்றைவிட இன்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 34 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு இல்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,025- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 310-ல் இருந்து 334- ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 18,858- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனாவில் இருந்து மேலும் 28- பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 552- ஆக உயர்ந்துள்ளது.