ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு...!
ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு திடீர் வருகை தந்து ஆய்வு நடத்தினார்.
ஆரல்வாய்மொழி,
தமிழக சட்டம் ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு இன்று நாகர்கோவில் வரும் வழியில் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு திடீரெனறு வருகை தந்தார்.
அப்போது இன்ஸ்பெக்டர் மீனா நாகர்கோவில் உயர் அதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டத்திற்கு சென்றிருந்தார். இதனால் டி.ஜி.பி சைலேந்திரபாபு அவர்களை அங்கிருந்த போலீசார் வரவேற்றனர்.
பின்னர் வெளியே நிறுத்தபட்டிருந்த விபத்து வாகனங்களை பார்வையிட் டி.ஜி.பி வழக்கை துரிதமாக முடிதது அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்க அறிவுருத்தினார்.
பின்னர் காவல்நிலையத்தை சுற்றி பார்த்துவிட்டு காவல்நிலைய வருகை பதிவேடு, உண்மை குற்ற சம்பவ பதிவேடு, முதல் தகவல் அறிக்கை பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின் கோப்புகளை சிறந்த முறையில் பராமரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, எழுத்தர் செந்தில் ஆகியோரை பாராடடி எழுத்தர் செந்திலிடம் ரூ. 5 ஆயிரம் வெகுமதியும் வழங்கினார்.