தென்காசி: கடையம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதியதில் பிளஸ் 2 மாணவன் உயிரிழந்தார்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் கடையம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதியதில் பிளஸ் 2 மாணவரான சைலப்பன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னதாக பேருந்து வளைவில் திரும்பியபோது, நின்றுகொண்டிருந்த மாணவன் மீது உரசியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.