உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி..! - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
சர்வதேச புத்தக தினத்தை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சென்னை,
சர்வதேச புத்தக தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர், 'அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே! திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் உள்ளங்கைக்கே வந்துவிடும் இக்காலத்தில், உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி!
ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வோம்! ஆழ வாசிப்போம்! புத்தகங்களை நேசிப்போம்!' என்று கூறியுள்ளார்.
அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே!
— M.K.Stalin (@mkstalin) April 23, 2022
திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் உள்ளங்கைக்கே வந்துவிடும் இக்காலத்தில், உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி!
ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வோம்!
ஆழ வாசிப்போம்! புத்தகங்களை நேசிப்போம்! #WorldBookDay