தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.152 உயர்வு....!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.152 உயர்ந்து, ரூ.39,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2022-04-22 06:14 GMT
சென்னை,

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. சில நாள்கள் குறைந்து காணட்டப்பட்டது. கடந்த ஒருவாரத்துக்கு மேலாக உயா்ந்து கடந்த வாரம் மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. சில நாள்களாக மீண்டும் குறையத் தொடங்கியது. நேற்று வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.136 குறைந்து, ரூ.39,568-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக இன்று வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.150 அதிகரித்து, ரூ.39,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.19 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 90 காசுகள் குறைந்து, ரூ.71.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.73,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்