பெரிய மார்க்கெட்டில் மீன்கள் திருடிய 2 பேர் கைது

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் மீன்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-20 16:25 GMT
புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் மீன்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருட்டு
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். (வயது 37). இவர் தனது சகோதரி நாகலட்சுமியுடன் சேர்ந்து புதுவை பெரிய மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர், வியாபாரம் முடிந்த பின்னர் மீதியிருந்த மீன்களை ஐஸ் பெட்டியில் மூடி வைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். அதன் பின்னர் நேற்று காலை சென்று பார்த்த போது, ஐஸ்பெட்டியில் வைத்திருந்த மீன்களை காணவில்லை. இரவு நேரத்தில் மர்மநபர்கள் மீன்களை திருடி சென்றது தெரியவந்தது. 
2 பேர் கைது
இதுகுறித்து பெரியகடை போலீஸ் நிலையத்தில் ராஜேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ரங்கபிள்ளை வீதியை சேர்ந்த விஜய் (22), சதீஷ் (22), குரு (21) ஆகிய 3 பேரும் சேர்ந்து மீன்களை திருடியது தெரியவந்ததது. இதனை தொடர்ந்து விஜய், சதீஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். குருவை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்