4 வயது சிறுவனுடன் இலங்கையில் இருந்து அகதியாக தமிழகம் வந்த பெண்

அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது

Update: 2022-04-20 03:49 GMT
ராமேசுவரம் ,,

அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை வாங்க முடியவில்லை. அதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள். 

பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டி இருக்கிறது. மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 

இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது 

இந்நிலையில் இலங்கை மட்டகளப்பு மாவட்டத்தை சேர்ந்த , ஒரு சிறுமி, 4 வயது சிறுவனுடன்  ,ஒரு பெண் அகதியாக  தனுஷ்கோடி வந்துள்ளார்  .

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குபின்னர் ஏராளமான அகதிகள் தனுஷ்கோடிக்கு வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்