திருப்பூர்: கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த சரக்கு லாரி...!

திருப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த சரக்கு லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-04-18 04:00 GMT
பல்லடம், 

கோவையில் இருந்து பழைய பேப்பர் லோடு ஏற்றிய சரக்கு லாரி ஒன்று பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது. கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் லாரியில் இருந்த சரக்குள் அனைததும் சாலையில் சிதறி வீணானது. மேலும் விபத்தில் சிக்கிய காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தகவலறிந்து சம்பவிடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி பொக்லைன் உதவியுடன் சாலையில் கிடந்த லாரி மற்றும் காரை அகற்றினர்.

இந்த விபத்தால் கோவை- திருச்சி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்