சேலம்: பாக்கெட் சாராயம் விற்பனை செய்த தொழிலாளி கைது...!
சேலம் அருகே பாக்கெட் சாராயம் விற்பனை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர்,
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே பாலமலை பகுதியை சேர்ந்த தொழிலாளி பெருமாள் (வயது 40). இவர் சாராயத்தை மாத்தூர் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டுவருவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து வெள்ளித்திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலு முத்து மற்றும் போலீசார் மாத்தூர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்து பெருமாளை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அரை லிட்டர் அளவு கொண்ட 14 பாக்கெட் சாராயத்தை விற்பனை செய்ய அவர் வைத்திருந்தது போலீசாருக்கு தெரியவந்து.
பின்னர் அவரை கைது செய்த போலீசார் 14 பாக்கெட்டுகளில் இருந்த சாராயம் மற்றும் அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.