சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம்...!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் கார்த்திகை தீபம், சித்திரா பவுர்ணமி போன்ற நாட்களில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில் வரும் 16-ம் தேதி சித்திரா பவுர்ணமி வரவுள்ள நிலையில் விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்டம் நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று மாலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது மாவட்ட கலெக்டர் முருகேஷ், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி திருமகள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.