மதுரை சித்திரைத் திருவிழா: ஏப்.14-ம் தேதி முதல் 19-ம் வரை சிறப்பு பஸ்கள் இயக்கம்

சித்திரை திருவிழாவையொட்டி ஏப்ரல் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-12 15:23 GMT
மதுரை,

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், சித்திரை திருவிழாவையொட்டி ஏப்ரல் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திருவிழாவுக்கு வந்து செல்ல வசதியாக 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

75 சிறப்பு பஸ்களும் திருமங்கலம், மேலூர், திருப்புவனம், வாடிப்பட்டி, உசிலம்பட்டியில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகள்