இடியுடன் கூடிய பலத்த கனமழை - வேகமாக உயர்ந்து வரும் அணைகளின் நீர்மட்டம்
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், வெப்பம் தனிந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அனைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கும்பகோணம் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவடாரப்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. இந்த மழையால் வெப்பம் தனிந்துள்ளதால், அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று கருமேகங்கள் சூழ்ந்து நல்ல மழை பெய்தது. இதனால், அப்பகுதிகளில் வெப்பம் தனிந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. தொடர்ந்து பெய்துவரும் மழையால், பயறு, உளுந்து அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்துவருகிறது. இந்த மழையால்,நெல்லை சந்திப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ள நிலையில், மழை நீரும் சூழ்ந்துள்ளது. இதனால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையால், அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.