மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை...!

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியையொட்டி மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-12 12:15 GMT
மதுரை,

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதால் மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். ஏப்-16ல் கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் குறைந்த அளவு ஊழியர்களுடன் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்