லாரி மோதி பெண் ஏட்டு பரிதாப சாவு
குடிநீர் லாரி மோதிய விபத்தில் பெண் ஏட்டு பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டல் பாய் (வயது 45). இவர் கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் லைசன் (50), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கிறிஸ்டல் பாய் நேற்று காலையில் பணியை முடித்து விட்டு மார்த்தாண்டம் வெட்டுமணியில் உள்ள குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு ஸ்கூட்டரில் சொந்த வேலையாக சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டார்.
விபத்தில் சாவு
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் ஒரு குடிநீர் லாரி வந்துகொண்டிருந்தது. இந்தநிலையில் திடீரென குடிநீர் லாரி கிறிஸ்டல் பாய் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.