கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மதுரை,
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி வினாடிக்கு 1000 கன் அடி வீதம் தண்ணீர் ஆற்றுப்படுகைகளின் வழியாக திறக்கப்படுகிறது.
சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.