கடல்பாசி வளர்ப்பில் மீனவர்களை ஊக்குவிக்க மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடவடிக்கை
‘கப்பா பைகஸ்’ கடல் பாசியை வளர்ப்பதற்கு மீனவர்களை ஊக்குவிக்க மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கன்னியாகுமரி,
கடற்பரப்பில் வளரும் ‘கப்பா பைகஸ்’ என்ற வகை கடல் பாசிகள் மருந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிப்பற்கு பயன்பட்டு வருகிறது. இந்த கடல்பாசியை தொட்டிகளில் வளர்க்கும் முயற்சியில் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் மையம் ஈடுபட்டுள்ளது.
குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் இந்த ‘கப்பா பைகஸ்’ வகை கடல்பாசியின் முக்கியத்துவத்தை மீனவர்களிடம் எடுத்துரைக்கவும், மீனவர்களுக்கு அதனை மானியத்தில் வழங்கி வளர்க்க செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அந்த மையத்தின் துறைத்தலைவர் தெரிவித்துள்ளார்.