ரேஷனில் காலாவதியான எண்ணெய்... சமைத்து சாப்பிட்ட 3 பேருக்கு சிகிச்சை

ரேஷன் கடையில் வழங்கப்பட்ட காலாவதியான சமையல் எண்ணெயை பயன்படுத்திய மூன்று பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2022-04-09 16:30 GMT
கோப்புப்படம்
மன்னார்குடி,

மன்னார்குடி அருகே உள்ள நொச்சியூரில் ரேஷன்கடையில் கடந்த புதன் கிழமை அரிசி, சமையல் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட சமையல் எண்ணெய்யில் உணவு சமைத்து சாப்பிட்ட ஒரு பெண் உட்பட 3 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட மூவரும் சித்தாமல்லி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட சமையல் எண்ணெய் குறித்து பரிசோதிக்கப்பட்டது. அதில் கடந்த டிசம்பருடன் காலாவதியான எண்ணெயை வழங்கியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. 

இதனால் அச்சமடைந்த அப்பகுதியினர், தரமான உணவு பொருட்களை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்