இனி பாக்கெட்டுகளில் ரேஷன் அரிசி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
ரேஷன் கடையில் விரல் ரேகைக்கு பதிலாக புதிய முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், பாக்கெட்டுகளில் தரமான அரிசி வழங்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மானிய கோரிக்கை மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் உளுந்தம் பருப்பு ஒரு கிலோவும், சர்க்கரையும் கூடுதலாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம். விவசாயிகள் பெயரில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மோசடியாக நெல் கொண்டு வருவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எந்த நெல்லையும் திறந்தவெளியில் சேமிக்காமல் அரவை ஆலைகளுக்கே அனுப்பிவைக்கும் நடைமுறையை செயல்படுத்த உள்ளோம்.
இனிமேல் நேரடி கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் நெல்லை திறந்தவெளியில் வைக்கமாட்டோம். அதை அரவை ஆலைக்குத்தான் அனுப்பப்போகிறோம். எங்கேயும், டெல்டா மாவட்டங்களிலும் திறந்தவெளி ‘கேம்ப்’ இருக்காது.
ஊதிய உயர்வு வழங்கப்பட்ட பின்னரும் சில நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்கு பணம் பெற்றுவருவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, புகார்களுக்கு உள்ளான 27 பட்டியல் எழுத்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுளளனர். இவ்வாறு கொள்முதலுக்கு பணம் பெறும் முறைகேடு வருங்காலத்தில் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
பாக்கெட்டில் அரிசி
பொது வினியோக திட்டத்தின்கீழ் மக்களுக்கு தரமான, நிறமான அரிசி வழங்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அரவை ஆலைகள் அனைத்திலும் ‘கலர் சார்ட்டர்’ பொருத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அரவை முகவர்களாக 376 ஆலைகள் இருந்ததை தற்போது 583 ஆலைகளாக உயர்த்தியுள்ளோம். இவற்றில் பெரும்பாலான ஆலைகளில் கலர் சார்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆலைகளிலும் கலர் சார்ட்டர் பொருத்தப்படும்.
புதிதாக வரும் அரவை ஆலைகளில் அது பொருத்தப்பட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு நெல் அரைப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தரம் மற்றும் நிறம் குறைந்த அரிசியை தனியாக பிரித்து அவற்றை கடைகளுக்கு அனுப்புவது தடுக்கப்படுகிறது. அவ்வாறு ரேஷன் கடைகளில் தரமற்ற, மோசமான அரிசியாக இருந்தால், அதை திரும்பப்பெற வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம்.
கடந்த ஆண்டு மானிய கோரிக்கையில் அறிவித்தவாறு நாளொன்றுக்கு 500 டன் அரவைத் திறனுடன் 6 ஆலைகள் அரசு, தனியார் பங்களிப்புடன் நிறுவப்படும். 6 ஆலைகளை டெல்டா மாவட்டங்களில் நிறுவ இருக்கிறோம். விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து உடனடியாக அங்கே கொண்டுபோய் ‘சைலோ’ பொருத்தப்பட்டு அங்கேயே எல்லா வசதிகளுடன் செயல்படும்.
ஈரோடு மாவட்டம் நசியனூரில் தனியார் அரிசி ஆலையில் தினந்தோறும் ஆயிரம் டன் அரைக்கிறார்கள். அரிசியை பாக்கெட்டுகளில் போடுகிறார்கள். அதுபோன்ற அரிசி ஆலைகள் அரசு, தனியார் பங்களிப்புடன் நிறுவப்படும். அவற்றின் மூலம் பொதுமக்களுக்கு இனிமேல் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும். இவ்வாறு கருப்பு அரிசியை நீக்கி தரமான அரிசி வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
விரல் ரேகை இல்லாமலே...
7.5.2021 முதல் 6.4.2022 வரையிலான இந்த ஆட்சியில் அரிசி கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8 கோடியே 31 லட்சத்து 44 ஆயிரத்து 812 ரூபாய் மதிப்பிலான பொது வினியோக திட்ட அரிசி, மண்எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு உருளைகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. கடத்தலில் ஈடுபட்ட 80 நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 7 ஆயிரத்து 398 வழக்குகள் பதியப்பட்டு, 7 ஆயிரத்து 572 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்து 445 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2 ஆயிரத்து 32 வழக்குகள் கூடுதலாக இந்த ஆண்டு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது சபாநாயகர் மு.அப்பாவு குறுக்கிட்டு, ‘விரல் ரேகை விழாமல் அதிக மக்கள் அதிகாரிகளிடம் சென்று ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு மாதமும் அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு கடையிலும் 20 சதவீத மக்க ளுக்காவது இந்த நிலை ஏற்படுகிறது. இதற்கு ஒரு சரியான முடிவை சொல்லிவிடுங்கள்’ என்றார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, ‘அதற்காகத்தான் இந்த விளக்கத்தை கொடுக்கிறேன். இதற்கு விரைவிலே ஒரு நல்ல தீர்வு வர இருக்கிறது. முதல்-அமைச்சருடன் கலந்துபேசி நல்ல முடிவு எடுக்கப்பட உள்ளது. இனிமேல் விரல் ரேகைகூட வேண்டாம். வேறு மாதிரி அதைக் கொண்டுவருவதற்கு முதல்-அமைச்சர் விரைவிலே ஒரு அறிவிப்பை வெளியிட இருக்கிறார்’ என்று கூறினார்.