கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த கார்...!

திண்டுக்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரம் உள்ள வீட்டுக்குள் புகுந்து உள்ளது.

Update: 2022-04-08 06:30 GMT
குள்ளனம்பட்டி, 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுக்கோட்டை முடக்கு சாவடி பகுதியில் உள்ள சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. திடீர் என்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அப்போது சாலையின் ஓரம் இருந்த ஒரு வீட்டின் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் சுவரை உடைத்து கொண்டு கார் வீட்டுக்குள் புகுந்தது. இதனால் வீட்டின் முன்பக்க சுவர் சேதம் அடைந்து உள்ளது. 
அதிஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இது குறித்து அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்துக்கு உள்ளான காரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்