தீக்குளித்து பெண் தற்கொலை

சாப்பாடு நல்லா இல்லை என்று கணவர் திட்டியதால் தீக்குளித்து மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-07 17:48 GMT
தவளக்குப்பம் அடுத்த அபிஷேகப்பாக்கம் ரோடு வி.ஐ.பி. கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். தனியார் நிறுவனத்தில் ஓவியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயா (வயது 44). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். நேற்று மதியம் மது குடித்துவிட்டு சாப்பிடுவதற்காக பாஸ்கர் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது சாப்பாடு சரியாக செய்யவில்லை என மனைவியிடம் அவர் தகராறு செய்தார். 
இதனால் மனவேதனை அடைந்த ஜெயா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடல் முழுவதும் தீ பரவியதால் அலறி துடித்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெயா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்