2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

2 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று டெல்லி செல்கிறார்

Update: 2022-04-07 03:01 GMT
சென்னை, 

2 நாள் பயணமாக  தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று டெல்லி செல்கிறார்.டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

நீட் விலக்கு ,கூட்டுறவு திருத்த மசோதா உள்ளிட்டவை நிலுவையில் உள்ள நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு  திமுக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக முதல் அமைச்சர் மு.க  ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தார்.அப்போது,பிரதமர் மோடி,மத்திய உள்துறை  அமித்ஷா  ஆகியோரை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும் செய்திகள்