பள்ளி மாணவரை அடித்த கராத்தே மாஸ்டர் கைது

அரசுப்பள்ளி மாணவரை தவறு செய்ததாக கூறி அடித்த கராத்தே மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-06 16:32 GMT
புதுச்சேரி தேங்காய்திட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர், பள்ளியில் தவறு செய்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவரை, பள்ளியில் கராத்தே வகுப்பு எடுக்கும் செல்வமணி குச்சியால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவர், தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இது தொடர்பாக புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் செய்தனர். இது தொடர்பாக குழந்தைகள் நலக்குழு விசாரணை நடத்தியதில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது உறுதியானது. எனவே இது குறித்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கராத்தே மாஸ்டர் செல்வமணியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்