விழுப்புரம் : பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார்
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்பில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது .இந்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் . மேலும் அவர் பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அங்கு கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை பார்வையிட்டார் .
இதனை தொடர்ந்து ஒழிந்தியாப்பட்டு ஊராட்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.42 கோடியே 69 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் 10,722 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.