பெண் மீது தாக்குதல்

கல்லால் பெண்மீது தாக்குதல் நடத்தி கொலைமிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-04 16:42 GMT
புதுச்சேரி வாணரப்பேட்டை ராசு உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் மனைவி சூர்யா (வயது 31). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தசார்லஸ் (43) குடும்பத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 
இந்தநிலையில் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தபோது சூர்யாவை திட்டியதுடன் கல்லால் தாக்கி சார்லஸ் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சூர்யா சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்