காவலர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
புதுச்சேரியில் காவலர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியது.
புதுச்சேரியில் காவலர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியது.
சான்றிதழ் சரிபார்ப்பு
புதுச்சேரி காவல்துறையில் 390 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த 19-ந் தேதி நடந்தது. இதில் 2 ஆயிரத்து 644 பேர் கலந்துகொண்டு எழுத்து தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் கடந்த 21-ந் தேதி அதிகாலை வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று கோரிமேட்டில் உள்ள காவலர் சமுதாய நலக்கூட்டத்தில் தொடங்கியது.
புதுவை போலீஸ் டி.ஐ.ஜி. மிலிந்த் தும்ரே, போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வம், வீரவல்லவன் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பிறப்பு, கல்வித்தகுதி, இருப்பிடம், சாதி சான்றிதழ் ஆகிய அசல் சான்றிதழ்கள் மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட 5 புகைப்படம் வாங்கி வைக்கப்பட்டது.
103 பேர்
முதல்நாளான இன்று சான்றிதழ் சரிபார்ப்பில் 103 பேர் கலந்து கொண்டனர். நாளை (செவ்வாய்க்கிழமை) 100 பேருக்கும், நாளை மறுநாள் (புதன்கிழமை) 100 பேருக்கும், வியாழக்கிழமை 87 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க தவறினால் தகுதி இழப்பு செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.