நெல்லை: சூறை காற்றுடன் பெய்த மழையால் வாழைகள் சேதம்....!

நெல்லை அருகே சூறை காற்றுடன் பெய்த மழையால் வாழைகள் சேதம் அடைந்துள்ளது.

Update: 2022-04-04 12:45 GMT
சேரன்மாதேவி,

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி, மேலச்செவல், பத்தமடை, வீரவநல்லூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை வழக்கம் போல் வெயில் அடித்தது.

பின்னர் மதியம் 2 மணி அளவில் சூறை காற்றுடன் பெய்த மழை சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. இந்த மழையால்   சேரன்மாதேவி அருகே உள்ள கங்கணாங்குளம், கரிசல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்தது.

இது தொடர்பாக  விவசாயிகள் கூறுகையில்,

கோடை காலத்தில் சூறை காற்றுடன் பெய்த இந்த திடீர் மழையால் எராளமான வாழை மரங்கள் சாய்ந்து உள்ளது. அதிலும் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்தால் பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு அரசு உரிய நிவாரணம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்