கோவை: எரிந்த நிலையில் வாலிபர் உடல்: கொலையா...? தற்கொலையா...? போலீசார் விசாரணை...!

கோவை அருகே எரிந்த நிலையில் கிடந்த வாலிபர் உடலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-04-04 09:30 GMT
சரவணம்பட்டி,

கோவை எஸ்.எஸ்.குளம் வெள்ளானைப்பட்டி காட்டுப் பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் ஒரு ஆண் கருகிய நிலையில் இறந்து கிடப்பதாக கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்ததகவலின் அடிப்படையில் கோவில்பாளையம் போலீசார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் ஆரோக்கியராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

அப்போது எரிந்த நிலையில் இறந்து கிடப்பவர் கோவை வெள்ளாணைப்பட்டி எம்.ஜி.ஆர் காலணியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரது மகன் சரவணக்குமார் (வயது 27) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணக்குமார் மர்ம நபர்களால் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்