“நான் சாதாரண ஸ்டாலின் அல்ல“ - முதல்வர் அதிரடி பேச்சு!

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2022-04-03 06:31 GMT
சென்னை,

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;

மக்கள் நம்முடைய மதச்சார்பற்ற ஜனநாயக கட்சி அமைப்பின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். நாடாளுமன்றத்தேர்தலிலும், சட்டமன்றத்தேர்தலிலும், நமக்கு ஆதரவை தந்து தேர்ந்தெடுத்தனர். நாம் ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சித்தேர்தலில் நாம் வெற்றிபெற்றதற்கு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையே காரணமாகும்.

முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தால், கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. நிச்சயமாக உறுதியாக கலைஞர் சாதித்த வழியில் நானும் சாதிப்பேன் என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

சிக்கலில் இருந்து தப்பிக்கவே தான் டெல்லி சென்றுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். தமிழகத்தின் உரிமையை காக்கவே நான் டெல்லிக்கு சென்றேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன். இவ்வாறு முதல் அமைச்சர் பேசினார்.

மேலும் செய்திகள்