கோயம்பேடு சந்தையில் உயர்த்தப்பட்ட லாரி வாடகை - காய்கறிகளின் விலை உயர்வு
லாரி வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டதால் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
சென்னை,
கோயம்பேடு காய்கறி சந்தையில் லாரிகளின் குறைந்தபட்ச வாடகை கட்டணம் கிலோ மீட்டருக்கு நான்கில் இருந்து ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக, பல காய்கறிகளின் விலை கிலோவுக்கு 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
லாரிகளின் வாடகை கட்டண உயர்வால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு ஆகியவற்றின் எதிரொலியாக லாரிகளின் வாடகை கட்டணம் உயர்ந்திருப்பதாக லாரி ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.