பொதுப்பணித்துறை என்ஜினீயர்களுக்கு பதவி உயர்வு
புதுவை பொதுப்பணித்துறையில் பணிபுரியும் இளநிலை பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
புதுவை பொதுப்பணித்துறையில் பணிபுரியும் இளநிலை பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு
புதுவை பொதுப்பணித்துறையில் பணிபுரியும் 12 உதவி பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) பிரிவு சிற்றரசு குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளராகவும், நிலத்தடி நீர் பிரிவில் பணியாற்றும் வல்லவன் கட்டிடங்கள் பிரிவுக்கும், பொதுசுகாதார கோட்டத்தில் பணியாற்றும் பாலசுப்ரமணியன் தேசிய நெடுஞ்சாலை பிரிவுக்கும், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஸ்ரீதர் கட்டிடங்கள் பிரிவுக்கும், கட்டிடங்கள் பிரிவில் (பிரிவு-2) பணியாற்றும் மாணிக்கவாசகம் மத்திய அலுவலக திட்ட பிரிவுக்கும் செயற்பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொது சுகாதாரம்
பொதுசுகாதார கோட்டத்தில் பணியாற்றும் முருகானந்தம் அதே பிரிவில் செயற்பொறியாளராகவும், திட்டபிரிவு மணவாளன் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் பிரிவுக்கும், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் பிரிவு (தெற்கு) பிலிப் பிப்டிக் செயற்பொறியாளராகவும், பொது சுகாதார கோட்ட சுந்தரமூர்த்தி மத்திய டிசைன் பிரிவுக்கும், சர்க்கிள்-1-ல் பணிபுரியும் மகதூம் ஸ்மார்ட் சிட்ட திட்ட செயற்பொறியாளராகவும், கட்டிடங்கள் மற்றும் சாலை பிரிவில் பணியாற்றும் சவுந்தரராஜ் அதேபிரிவில் செயற்பொறியாளராகவும், நிலத்தடி நீர் பிரிவில் பணியாற்றும் ராதாகிருஷ்ணன் அதே பிரிவில் செயற்பொறியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் புதுவை பொதுப்பணித்துறை மத்திய அலுவலகத்தில் டிசைன் பிரிவு செயற்பொறியாளர் லட்சுமணன் உள்ளாட்சித்துறைக்கும், நிலத்தடி நீர் பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் மாகிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை பொதுப்பணித்துறை சார்பு செயலாளர் ஏழுமலை வெளியிட்டுள்ளார்.
ரங்கசாமி வாழ்த்து
பதவி உயர்வு பெற்றுள்ள செயற்பொறியாளர்கள் அனைவரும் தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தியுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.