புதுக்கோட்டை: திருவரங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை....!
திருவரங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
திருவரங்குளம் ,
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் சுற்றுவட்டார பகுதிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இதனால் மதியம் 1 மணி அளவில் திடீர் மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்தது.
தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.