நெல்லை: மதுபோதையில் தவறாக நடக்க முயன்றவரை போலீஸ் கண்முன்னே வெளுத்துவாங்கிய பெண்..!

பேருந்தில் மது போதையில் தவறாக நடக்க முயன்றவரை பெண் ஒருவர் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தார்.

Update: 2022-04-02 05:57 GMT
நெல்லை,

நெல்லை பேருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவில் சென்ற பேருந்தில் பெண் ஒருவர் பயணித்துள்ளார். அப்போது அதே பேருந்தில் ஏறிய மணிகண்டன் என்பவர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் பயணி மணிகண்டனை சாரமாரியாக தாக்கினார்.

அப்போது அங்கு வந்த போலீசார் பெண்ணை சமாதான படுத்தியும் ஆத்திரம் தாங்க முடியாத அந்த பெண், போலீசார் கண்முன்னேயே மணிகண்டனை நையப்புடைத்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் அதிக மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லையில் மதுபோதையில் தவறாக நடக்க முயன்றவரை போலீஸ் கண்முன்னே பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்