வன்னியர்கள் இடஒதுக்கீடு ரத்து: சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கடந்த அ.தி.மு.க. அரசு அவசர கோலத்தில் கொண்டு வந்ததால் சுப்ரீம்கோர்ட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை,
மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர் உள்ளிட்ட சில சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்து சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
எந்த ஒரு பிரிவினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று சுப்ரீம்கோர்ட்டு ஏற்றுக்கொண்டுள்ளபோதிலும், இந்த சிறப்பு ஒதுக்கீட்டிற்கு அடிப்படையான தரவுகள் சரியாக இல்லை என்றும், இதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் சரியான ஆதாரங்கள் இன்றி வழங்கப்பட்டு உள்ளதாகவும் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில்...
கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில், கருணாநிதி கொண்டு வந்த அருந்ததியினர் மற்றும் இஸ்லாமியருக்கான உள்ஒதுக்கீட்டு முறைகள் அனைத்திற்கும் சரியான ஆதாரங்களின் அடிப்படையில் சட்டங்கள் முறையாக இயற்றப்பட்டதால், அனைத்து நீதிமன்றங்களாலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ்நாட்டில் சமூகநீதி நிலைநாட்டப்பட்டுள்ளதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
ஆனால், முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அவசர கோலத்தில் அள்ளித்தெளித்தது போல சரியான அடிப்படை தரவுகள் இன்றி இந்த சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதால்தான் சுப்ரீம்கோர்ட்டால் இந்த சட்டம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.
சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை
முதல்-அமைச்சர் அறிவுறுத்தியபடி, மூத்த வக்கீல்களை நியமித்து, இந்த வழக்கு தொடர்பாக அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு முழுமூச்சுடன் மேற்கொண்டும், இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுனர்களிடம் தீவிரமாக கலந்தாலோசித்து தமிழக அரசு முடிவு எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.