"வன்னியர் உள்ஒதுக்கீடு- ஆலோசித்து நடவடிக்கை" - துரைமுருகன்
அரசியல் காரணங்களுக்காக, அவசர கோலத்தில் அதிமுக சட்டம் இயற்றியதால் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்த நிலையில், துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அடுத்தக்கட்ட நவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் தீவிரமாக கலந்து ஆலோசித்து தமிழக அரசு முடிவு எடுக்கும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழக அரசு முழு மூச்சுடன் முயற்சி மேற்கொண்டும் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக, அவசர கோலத்தில் அதிமுக சட்டம் இயற்றியதால் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
சரியான ஆதாரங்கள் அடிப்படையில் திமுக கொண்டு வந்த ஒதுக்கீடுகள் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சரியான அடிப்படை தரவுகள் இல்லாததாலேயே வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் அருந்ததியினர், இஸ்லாமியர்களுக்கான ஒதுக்கீடு சட்டங்கள் முறையாக இயற்றப்பட்டன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.