சுகாதாரத்துறைக்கு 10 நவீன ஆம்புலன்ஸ்கள்
புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு 10 நவீன ஆம்புலன்ஸ்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு 10 நவீன ஆம்புலன்ஸ்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ்
புதுச்சேரி சுகாதாரத்துறையின் கீழ் அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளுக்கு மேல்சிகிச்சை தேவைக்கும், அவரச சிகிச்சைக்கும் புதுவை அரசு பொது மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவமனை, மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதில் சில ஆம்புலன்ஸ்கள் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதுவை அரசு தற்போது சுகாதாரத்துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கி வருகிறது. எனவே சுகாதாரத்துறை சார்பில் நவீன வசதிகளுடன் கூடிய 10 ஆம்புலன்ஸ்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் வாரத்தில்...
புதுவை அரசு சுகாதாரத்துறை சார்பில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ்கள் அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் வாரத்தில் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் புதிய ஆம்புலன்ஸ்களை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தற்போது ஒரு ஆம்புலன்ஸ் மட்டும் வாங்கப்பட்டுள்ளது. அதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். நவீன வசதிகளுடன் கூடிய 10 புதிய ஆம்புலன்ஸ்கள் வந்த பின்னர் புதுச்சேரி மக்கள் மருத்துவ வசதி பெற மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.