சென்னை: மினி கிளினிக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்...!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மினி கிளினிக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-03-30 09:00 GMT
சென்னை,

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவ வசதி இல்லாத கிராமப் புறங்களில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டன. இதற்காக, 1,800 டாக்டர்கள், மாவட்ட நிர்வாகத்தால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். கொரோனா தொற்று அதிகரித்ததால், அதற்கான சிகிச்சை அளிக்க இவர்கள் பயன்படுத்தப் பட்டனர்.

பின்னர், தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதும், 'வருமுன் காப்போம், மக்களை தேடி மருத்துவம்' திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால், மினி கிளினிக்குகள் மூடப்பட்டன. அங்கு பணியாற்றிய 1,800 டாக்டர்கள் பல்வேறு பணிகளில் பணியமர்த்தப்பட்டனர். இவர்களின் பணிக்காலம் இம்மாதம் 31-ம் தேதியுடன் முடிகிறது.

இதனால் இத்தகைய பணியாளர்கள் தங்கள் பணியை நீட்டிக்க கோரி அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துவந்தனர்.

இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மினி கிளினிக் பணியாளர்கள் தங்களின்  கோரிக்கையை  வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களின்  கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி கோஷமிட்டனர். இதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இது தொடர்பாக மினி கிளினிக் பணியாளர்கள் கூறுகையில்.

மினி கிளினிக் பணியாளர்களை பணி நீக்க செய்த உத்தரவை அரசு ரத்து செய்ய வேண்டும். மேலும் தங்களின் பணி நீடிப்பையும், பணி பாதுகாப்பையும் உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மினி கிளினிக், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்