விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு: அமைச்சர் துரைமுருகன் துபாய் பயணம் மாற்றம்

விசாவில் பழைய எண் இடம்பெற்றிருந்ததால், நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனின் துபாய் பயணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

Update: 2022-03-29 11:14 GMT
கோப்புப்படம்
சென்னை,

நீர்பாசனத்துறை அமைச்சர்  துரைமுருகன் 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று துபாய் செல்ல இருந்தார். 

இதற்காக அவர் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையம் வந்தபோது, அவரது பாஸ்போர்ட் மற்றும் விசா ஆய்வுசெய்யப்பட்டது. அப்போது விசாவில் பழைய பாஸ்போர்ட் எண் குறிப்பிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால், அவர் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் பயணம்செய்ய முடியாமல் அவர் வீடுதிரும்பினார். 

இந்த நிலையில், விசாவில் உள்ள பாஸ்போர்ட் எண்ணை மாற்றி இன்று மாலை அமைச்சர் துரைமுருகன் துபாய் செல்வார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்