மார்த்தாண்டம்: மளிகை கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 18 கிலோ குட்கா பறிமுதல்..!
மார்த்தாண்டம் அருகே மளிகை கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 18 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து வியாபாரியை கைது செய்தனர்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே கரவிளாகம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (49). இவர் அந்தப் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் அவன் விற்பனைக்காக குட்கா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று அந்த மளிகை கடையை சோதனையிட்டனர். அப்போது கடைக்குள் 18 கிலோ குட்கா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் அந்த குட்காவை பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்தக் கடை வியாபாரி விஜயகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.