காரைக்காலில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காரைக்காலில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காரைக்கால்
மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, காரைக்காலில் அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளன தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஜார்ஜ், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனத்தின் 35 அம்ச கோரிக்கைகள் மற்றும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.