‘தமிழகத்தில் 60 சதவீத பஸ்கள் நாளை ஓடும்’- போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.
சென்னை,
வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி மத்திய அரசை கண்டித்து சென்னை அண்ணாசாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மதியம் விடுவிக்கப்பட்டனர்.
அப்போது தொ.மு.ச. பொருளாளர் கி.நடராசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடக்கிறது. மக்களும் சிரமம் அடைகிறார்கள் என்ற கோரிக்கையும் வந்துள்ளது. எனவே எங்களுடைய முன்னணி நிர்வாகிகள் மட்டும் வேலைக்கு செல்லாமல் நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்வார்கள்.
மாணவர்கள், பொதுமக்கள் நலன் தான் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு தொழிலாளர்கள் பஸ்களை இயக்குவார்கள். எனவே தமிழகம் முழுவதும் 60 சதவீத பஸ்கள் இன்று ஓடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.