சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக மாலா, சவுந்தர் பதவியேற்பு
சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகளாக மாலா, சவுந்தர் பதவியேற்றுக்கொண்டனர்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சௌந்தர் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
2 ஆண்டுகள் நீதிபதிகளாக பதவி வகித்த பிறகு 2 பேரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவர்.
இதன்மூலம் சென்னை ஐகோர்ட்டின் நீதிபதிகளின் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. பெண் நிதீபதிகள் எண்ணிக்கை 13 உயர்ந்துள்ளது.