முதல்-அமைச்சரின் அரசு முறை பயணத்தை கொச்சைப்படுத்துவதா? அண்ணாமலை பேச்சுக்கு இரா.முத்தரசன் கண்டனம்
முதல்-அமைச்சரின் அரசு முறை பயணத்தை கொச்சைப்படுத்துவதா? அண்ணாமலை பேச்சுக்கு இரா.முத்தரசன் கண்டனம்.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
துபாயில் நடைபெறும் எக்ஸ்போ-2022 கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை அரங்குகளை திறந்து வைக்கவும், ஐக்கிய அமீரக அரபு நாடுகளில் உள்ள பெரும் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கு வந்து, தொழில்களில் முதலீடு செய்ய அழைக்கவும் முதல்-அமைச்சர் 4 நாள் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
முதல்-அமைச்சரின் பயணம் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாத வெளிப்படையானது. தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை முதல்-அமைச்சர் துபாய் பயண மர்மம் என்றெல்லாம் அடிப்படையில்லாத ஆதாரமற்ற புகார்களை பொது வெளியில் பேசி வருவது அநாகரிக அரசியல் ஆகும். இதுபோன்ற மலிவான செயலில் ஈடுபடுவதை பா.ஜ.க. தலைவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். முதல்-அமைச்சரின் அரசு முறைப் பயணத்தை கொச்சைப்படுத்தும் அண்ணாமலையின் செயலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கண்டிக்கிறது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.