அரசு விடுதிகளில் போட்டி தேர்வு பயிற்சி மையங்கள்
அரசு விடுதிகளில் போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என எஸ்.சி., எஸ்.டி மக்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளனர்.
காரைக்கால் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. மக்கள் நலக் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் மதகடியில் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர்கள் நாகூரான், அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அமிலன், சமூக சேவகர் மணவாளன், சந்திரசேகரன், மதியழகன், ரவி, தங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மாணவர் விடுதிகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அரசு விடுதிகளில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசின் சிறப்புக்கூறு துணை திட்ட நிதியை முழுமையாக ஆதிதிராவிட மக்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.