உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.614 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.614 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Update: 2022-03-25 19:24 GMT
கோப்புப் படம்
சென்னை,

தமிழ்நாடு அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில நிதி ஆணையம் மற்றும் மத்திய நிதி ஆணையம் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு அரசு 5-வது மாநில நிதி ஆணையம் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.614 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. 

மேலும், தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக அடிப்படை மானியமாக 15-வது மத்திய நிதி ஆணையத்தின் மூலமாக ரூ.799 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்