லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

வில்லியனூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-25 18:17 GMT
வில்லியனூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை ஆட்டுப்பட்டி பகுதியில் 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமு தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 3 நம்பர் லாட்டரி  சீட்டு விற்று செல்போன் மூலம் முடிவுகளை தெரிவித்து கொண்டிருந்த ஒருவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர், கணுவாபேட்டை புதுநகரை சேர்ந்த ஜெயராமன் (வயது 53) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு லாட்டரி சீட்டு கொடுத்த விழுப்புரத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரை தேடி வருகின்றனர். இதேபோல் வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்றதாக திருக்காமீஸ்வரர் நகரை சேர்ந்த சேகர் என்ற பாம்பே சேகர் (62), புதுவையை சேர்ந்த அரவிந்த் (62) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்