தஞ்சையில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு..!

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இருந்து, விவசாயிகள் வெளியே சென்றனர்.

Update: 2022-03-25 07:18 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் எழுந்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டித்தும், இதற்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு கூட்டத்திலிருந்து வெளியே சென்றனர்.

அப்போது கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் மண் பானைகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்