ஒட்டன்சத்திரம் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தகவல்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து கோட்டாட்சியர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
திண்டுக்கல் அடுத்த ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம், கே.கீரணூர் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், திடீரென சத்தம் கோட்டதாகவும் தெரிவித்த அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியே வந்து சாலையோரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து அந்த பகுதிக்கு நேரில் சென்றுள்ள கோட்டாட்சியர் சிவக்குமார், நிலநடுக்கம் ஏற்பட்டாத என விசாரணை நடத்தி வருகிறார். ஒட்டன்சத்திரம் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.