நில அபகரிப்பு வழக்கு : ஜெயக்குமார் மகளை கைது செய்யக்கூடாது : சென்னை ஐகோர்ட்டு
ஜெயக்குமாரின் மகளை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது
சென்னை,
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன்குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்
இந்நிலையில் நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாரின் மகளை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு
அறிவுறுத்தியுள்ளது .மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும்விசாரணையை மார்ச் 30க்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.