ராமநாதபுரம் ஐ.என்.எஸ். பருந்து - 2 அதிநவீன ஹெலிகாப்டர்கள் சேர்ப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். கடற்படை விமான தளத்திற்கு இரண்டு அதிநவீன ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பு பணிக்காக இன்று முதல் வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2022-03-23 06:38 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். கடற்படை விமான தளத்திற்கு இரண்டு அதிநவீன ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பு பணிக்காக இன்று முதல் வழங்கப்பட்டு உள்ளது.

ஐ.என்.எஸ். பருந்து

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் அமைந்துள்ளது ஐ.என்.எஸ். பருந்து. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட 3000 அடி நீளமுள்ள விமான தளத்தை கடற்படை தன் வசம் எடுத்து அங்கு கடற்படையை அமைத்துள்ளது. இதற்கு கடற்படை தளம் ராஜாளி 2 என பெயரிடப்பட்டது.

பின்னர் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு முழுமையான ஒரு கடற்படை விமான தளமாக மாற்றப்பட்டு ஐ.என்.எஸ். பருந்து என புதிய பெயர் சூட்டப்பட்டது. கடற்படையில் தற்போது எம்.கே2, ஹெரான் ஆளில்லா விமானம் போன்றவற்றின் மூலம் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை உள்ளிட்ட பகுதியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய ஹெலிகாப்டர்கள் 

இந்நிலையில் ஐ.என்.எஸ். பருந்துக்கு வலு சேர்க்கும் வகையில் 2 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.  இந்திய கடற்படை கிழக்குப் பிராந்திய தளபதி பிஸ்வத்தாஸ் குப்தா ஹெலிகாப்டர்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். 

உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட இரண்டு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் இன்று முதல் தமிழ்நாட்டின்  ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளி ஐ.என்.எஸ். பருந்து இந்திய கடற்படை விமான நிலையத்தில் முறைப்படி இணைக்கப்பட்டன.
 
இந்த ஹெலிகாப்டர்கள் ஐஎன்எஸ் பருந்துவின் சிவில் பிரமுகர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் முன்னிலையில் பாரம்பரியமாக நீர் பீரங்கி வணக்கம் செலுத்தப்பட்டு வரவேற்கப்பட்டன.

மேலும் செய்திகள்